பெற்றோர் மனைவி பிள்ளைகள் என குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்த பந்தங்களை விட்டு பல்வேறு நோக்கங்களுக்காக வெளிநாடுகளில் வசிக்கும் ஒவ்வொரு நபரையும் கண்கலங்கச்செய்திருக்கிறது ரியாஸ் முகம்மதின் வலிகள் நிறைந்த “இரைதேடும் பறவைகள்” பாடல் வரிகள்.
இசையமைப்பாளர் சமீலின் இசையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ரியாஸின் உணர்வுபூர்வமான வரிகளில் கடந்த 6ஆம் திகதி வெளியிடப்பட்டது “இரைதேடும் பறவைகள்” என்ற பாடல்.
இலங்கையைவிட்டு வெளிநாடுகளில் தொழில்புரியும் சகலரது உள்ளத்தையும் தொடும் இந்த பாடலுக்கு பாராட்டுக்களும் பின்னூட்டல்களும் குவிந்தவண்ணம் இருக்கின்றன. தென்னிந்திய பிரபல நடிகர்கள் திரைப்பட இயக்குனர்கள் ஊடகவியலாளர்கள் மக்கள் பிரதிநிதிகள் கவிஞர்கள் என பலரும் இப்பாடலுக்கு காணொளி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருக்கின்றனர்.
“மிக மிக அருமை” , “என்னை அறியாமல் கண்ணீர் வடிக்கும் பாடல்” , “என் இதயத்தை தொட்டபாடல்” , “இந்த பாடலை கண்மூடி கேட்டால் அனைவரும் கன்முன்னே வருகிறார்கள்” என்று கண்களை கலங்கச்செய்யும் எராளமான பின்னூட்டலை “இரைதேடும் பறவைகள்” பாடலுக்கு பொதுமக்கள் வழங்கிவருகிறார்கள்.
குடும்ப சுமைகளால் தங்கள் ஆசைகள் கனவுகள் இலட்சியங்கள் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு கடல் கடந்து வெளிநாடுகளுக்கு சென்று தன்னை மெழுகுவர்த்தியாக உருக்கி குடும்பங்களுக்கு ஒளி கொடுத்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்தப் பாடலை சமர்ப்பணம் செய்திருப்பதாக ரியாஸ் முகம்மத் Geneva 24 செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
அனைவரும் கட்டாயம் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய பாடலின் காணொளி இங்கே இணைக்கப்பட்டடுள்ளது.
https://www.youtube.com/watch?v=OfOx2HeaAnI
