சுவிட்ஸர்லாந்தில் புகலிடக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட மூன்று இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த மூன்று பேரும் கடந்த வியாழனன்று சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் 2015 ஆம் ஆண்டு புகலிடம் கோரிய ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக சுவிட்ஸர்லாந்தில் இலங்கையர்களின் புகலிடக்கோரிக்கைகள் அதிகம் நிராகரிக்கப்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது
